கணியம் – Tamil Computer E-Magazine


கணியம் இதழ் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 🙂

கணினி கற்க மொழி ஒரு தடையல்ல. நீங்கள் தமிழில் எளிதில் கற்றுக்கொண்டு, புரிந்து கொள்ளும் நபராக இருந்தால், கணினி கற்க உங்களுக்கு கணியம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும். கணியம் என்பது மாதம் ஒரு முறை வெளிவரும் மின் – இதழ். இதனை நீங்கள் இலவசமாக pdf file ஆக உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் படித்து பயன்பெறலாம்.

இவ்விதழில் இடம் பெறும் அனைத்து தகவல்களும் கட்டற்ற மென்பொருள் (Free Software) சார்ந்தவையாக மட்டுமே இருக்கும்.
கட்டற்ற மென்பொருள் (Free Software) பற்றி அறிய இங்கே பார்க்கவும்:-
ஆங்கிலத்தில் படிக்க:– http://www.gnu.org/philosophy/free-sw.html
தமிழில் படிக்க:– http://www.gnu.org/philosophy/free-sw.ta.html

கணியம் இதுவரை 5 இதழ்களை வெளியிட்டுள்ளது, இவை அனைத்தையும் மற்றும் இனி வர இருக்கும் இதழ்களை பதவிறக்கம் செய்யவும் இங்கே செல்லவும்:- http://kaniyam.com/

கணியம் இதழில் நீங்களும் கட்டுரைகள் எழுதலாம். ஆம், நீங்கள் குனு/லினக்ஸ் (GNU/Linux) பயன்பாட்டாளராக இருந்தாலோ அல்லது கட்டற்ற மென்பொருள்கள் பற்றி தெரிந்திருந்தாலோ உங்கள் கட்டுரைகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ ” editor@kaniyam.com ”  என்ற மின் – அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அனுப்பும் முன் இதழின் இறுதியில் இடம்பெற்றிருக்கும் விதிகளை பார்க்கவும்.

கணியம் ஆசிரியர் பெயர்:ஸ்ரீனி என்கிற ஸ்ரீனிவாசன். இவர் இந்தியன் லினக்ஸ் பயன்பாட்டாளர்கள் சென்னை குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்
(Indian Linux Users Group – Chennai‘s Co-ordinator)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s